search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விலை உயர்வு"

    • டாஸ்மாக் மதுபானங்கள் விலையை குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த அரசு முடிவு.
    • 'ஆப்' பாட்டில், முழு பாட்டில் விலையும் ரூ.30 முதல் ரூ.80 வரை விலை உயருகிறது.

    தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருகிறது. இதனால் டாஸ்மாக் மதுக்கடைகள் இப்போது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

    பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் பஸ் நிலையம், ரெயில் நிலையம், பள்ளிக்கூடங்கள் அருகேயும் டாஸ்மாக் மதுக்கடைகள் இன்னும் இயங்கி கொண்டுதான் இருக்கிறது. இப்போது மொத்தம் 4829 மதுக்கடைகள் செயல்படுகிறது.

    அரசுக்கு பல்வேறு நிதிச்சுமை ஏற்பட்டுள்ள நிலையில் வருவாயை பெருக்குவதற்கு டாஸ்மாக் மதுபானங்கள் விலையை குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

    அதன்படி பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், ஓட்கா உள்ளிட்ட மதுவகைகளின் விலை குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் விரைவில் உயர உள்ளது. இதற்கேற்ப 'ஆப்' பாட்டில், முழு பாட்டில் விலையும் ரூ.30 முதல் ரூ.80 வரை விலை உயருகிறது.

    இந்நிலையில், வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறித்துள்ளது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 11 கார்களை விற்பனை செய்து வருகிறது.
    • கார்களின் விலை மாற்றம் பிப்ரவரியில் அமலுக்கு வருகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. விலை உயர்வு பிப்ரவரி 1-ம் தேதி அமலுக்கு வருகிறது. ஐ.சி. என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் கார் மாடல்கள் என அனைத்தின் விலையும் உயர்த்தப்படுகிறது. இந்த முறை கார்களின் விலை 0.7 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

    தற்போது ஏழு ஐ.சி. என்ஜின் கார்கள் மற்றும் நான்கு எலெக்ட்ரிக் கார்களை இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்து வருகிறது. இதில் டியாகோ, டியாகோ EV, டிகோர், டிகோர் EV, பன்ச், பன்ச் EV, அல்ட்ரோஸ், நெக்சான், நெக்சான் EV, ஹேரியர் மற்றும் சஃபாரி உள்ளிட்டவை அடங்கும்.

     


    சமீபத்தில் தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பன்ச் EV மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 10 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நான்காவது எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இந்த எலெக்ட்ரிக் கார் நான்கு வேரியன்ட்களில் கிடைக்கிறது. 

    • மாருதி சுசுகி தனது வாகனங்கள் விலையை மாற்றி இருக்கிறது.
    • பலேனோ மாடல் நான்கு வேரியன்ட்களில் கிடைக்கிறது.

    மாருதி சுசுகி லிமிடெட் நிறுவனம் தனது நெக்சா பிரான்டு கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் இக்னிஸ், பலேனோ, ஃபிரான்க்ஸ், ஜிம்னி, சியாஸ், XL6 மற்றும் கிரான்ட் விட்டாரா போன்ற மாடல்கள் நெக்சா பிரான்டிங்கில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டை போன்றே இந்த ஆண்டும் மாருதி சுசுகி தனது வாகனங்கள் விலையை மாற்றி இருக்கிறது.

    அதன்படி இக்னிஸ் ஹேச்பேக் மாடலின் விலை ரூ. 5 லட்சத்து 84 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் என்ட் மாடல் விலை ரூ. 8 லட்சத்து 25 ஆயிரம் ஆகும். இந்த மாடலின் AMT வேரியன்ட்களுக்கு ரூ. 5 ஆயிரம் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மேனுவல் வேரியன்ட்களின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

     


    மாருதி சுசுகி பலேனோ மாடலின் மேனுவல் மாடல்கள் விலை ரூ. 5 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் AMT மாடல்கள் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்திய சந்தையில் பலேனோ மாடல் சிக்மா, டெல்டா, சீட்டா மற்றும் ஆல்ஃபா போன்ற வேரியன்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 6 லட்சத்து 66 ஆயிரம் என துவங்குகிறது. டாப் என்ட் மாடல் விலை ரூ. 9 லட்சத்து 88 ஆயிரம் ஆகும்.

    கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி சுசுகி ஃபிரான்க்ஸ் 1.2 லிட்டர் NA பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் இதன் 1.0 லிட்டர் AT மாடல் விலை ரூ. 10 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. மற்ற மேனுவல் வேரியன்ட்களின் விலை ரூ. 5 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

     


    மாருதி சுசுகி கிரான்ட் விட்டாரா மாடல்களின் விலை ரூ. 10 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் விலை ரூ. 10 லட்சத்து 80 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 20 லட்சத்து 09 ஆயிரம் ஆகும். மாருதி சுசுகி ஜிம்னி மாடல்களின் விலை ரூ. 10 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது. இதன் விலை ரூ. 12 லட்சத்து 74 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 14 லட்சத்து 95 ஆயிரம் என மாறியுள்ளது.

    XL6 மாடல்கள் விலை ரூ. 5 ஆயிரம் உயர்த்தப்பட்டு தற்போது இதன் விலை ரூ. 12 லட்சத்து 56 ஆயிரத்தில் இருந்து ரூ. 14 லட்சத்து 77 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மாருதி சுசுகி இன்விக்டோ மாடல்களின் விலை ரூ. 50 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் விலை தற்போது ரூ. 25 லட்சத்து 21 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 29 லட்சத்து ஆயிரத்து 500 ஆக மாறி இருக்கிறது.

    மாருதி சுசுகியின் செடான் மாடல் சியாஸ் விலை ரூ. 10 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் விலை தற்போது ரூ. 9 லட்சத்து 40 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 12 லட்சத்து 45 ஆயிரம் ஆகும்.

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • புறநகர் பகுதிகளான பல்வேறு கிராமங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
    • பரவலாக பெய்த மழை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்தும் குறைந்து காணப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் ஒருங்கிணைந்த பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கல் புறநகர் பகுதிகளான பல்வேறு கிராமங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

    பின்னர் இங்கிருந்து வியாபாரிகள் அதனை வாங்கிச்சென்று விற்பனை செய்து வருகின்றனர். கடந்த மாதம் மார்கழி என்பதால் எந்தவித திருமணம் உள்ளிட்ட விஷேச நிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை. மேலும் பரவலாக பெய்த மழை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்தும் குறைந்து காணப்பட்டது.

    இந்நிலையில் ஒரு மாதத்திற்கு பின்பு நாளை தை மாதத்தின் முதல் வளர்பிறை முகூர்த்த நாள் வருகிறது. நாளை திருமணம் உள்ளிட்ட பல்வேறு விஷேச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளநிலையில் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.

    திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இன்று 30 கிலோ மல்லிகை மட்டுமே விற்பனைக்கு வந்தது. இதனால் ஒரு கிலோ மல்லிகை ரூ.4000-க்கு விற்பனையானது. இதேபோல் முல்லைப்பூ ரூ.1800, ஜாதிப்பூ ரூ.1300, காக்கரட்டான் ரூ.1300, சம்பங்கி ரூ.300, அரளி ரூ.150, செவ்வந்தி ரூ.200, செண்டுமல்லி ரூ.70, கோழிக்கொண்டை ரூ.130, பட்டன்ரோஸ் ரூ.200, பன்னீர்ரோஸ் ரூ.150 என விற்பனையானது.

    வழக்கமாக மார்க்கெட்டுக்கு வரும் பூக்களில் பாதிஅளவு கூட இன்று விற்பனைக்கு வராததால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர். அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வர உள்ள நிலையில் பூக்களின் விலையேற்றம் சாமானிய மக்களை அதிர்ச்சி அடைய வைத்தள்ளது.

    • 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்து குவிந்துள்ளது.
    • கத்தரிக்காய், முட்டை கோஸ் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனை ஆகாமல் அதிகளவில் தேக்கமடைந்து உள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தினமும் காய்கறி விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

    இன்று 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்து குவிந்துள்ளது. நள்ளிரவில் வழக்கம் போல் விறு விறுப்பாக தொடங்கிய காய்கறி விற்பனை பின்னர் அதிகாலையில் மார்க்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகள், காய்கறி மற்றும் மளிகை கடைக்காரர்களின் வரத்து வெகுவாக குறைந்ததால் மந்தமாகி போனது.

    இதனால் கத்தரிக்காய், முட்டை கோஸ் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனை ஆகாமல் அதிகளவில் தேக்கமடைந்து உள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். வரத்து குறைவால் முருங்கைக்காய் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.120-க்கு விற்கப்படுகிறது.

    மொத்த விற்பனை விலை விவரம் கிலோவில் வருமாறு:-

    தக்காளி-ரூ.22, நாசிக் வெங்காயம்-ரூ.30, ஆந்திரா வெங்காயம்-ரூ.20, சின்ன வெங்காயம்-ரூ.50, உருளைக்கிழங்கு-ரூ.25, பீன்ஸ்-ரூ.25, அவரைக்காய்-ரூ.20, வெள்ளரிக்காய்-ரூ.10, பன்னீர் பாகற்காய்-ரூ.50, உஜாலா கத்தரிக்காய்-ரூ.25, வரி கத்தரிக்காய்-ரூ.15, கொத்தவரங்காய்-ரூ.50, வெண்டைக்காய்-ரூ.40, பீர்க்கங்காய்-ரூ.40, முருங்கைக்காய்-ரூ.120, கோவக்காய்-ரூ.30, முட்டை கோஸ்-ரூ.12, புடலங்காய்-ரூ.25, ஊட்டி கேரட்-ரூ.35, பீட்ரூட்-ரூ.25, சுரக்காய்-ரூ.20, பச்சை மிளகாய்-ரூ.30, முள்ளங்கி-ரூ.25, நூக்கல்-ரூ.25, இஞ்சி-ரூ.100.

    • கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காரணமாக முட்டை நுகர்வு அதிகரிப்பு.
    • வட மாநிலங்களில் முட்டை நுகர்வு அதிகரித்துள்ளதன் காரணமாக விலை உயர்வு.

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத உயர்வை அடைந்துள்ளது.

    புதிய உச்சமாக மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டு 5 ரூபாய் 75 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இதுவரை அதிகபட்சமாக 5 ரூபாய் 70 காசுகளுக்கு மட்டுமே முட்டை கொள்முதல் செய்யப்பட்டது.

    கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காரணமாக முட்டை நுகர்வு அதிகரித்துள்ளதன் காரணமாகவும், வட மாநிலங்களில் முட்டை நுகர்வு அதிகரித்துள்ளதன் காரணமாகவும் முட்டை கொள்முதல் விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மீன் விலையும் கடந்த சில நாட்களாக கடுமையாக குறைந்து வருகிறது.
    • வஞ்சிரம், வவ்வால், சங்கரா, சீலா, இறால், நண்டு போன்றவை கடந்த வாரத்தை விட இன்று விலை மிக குறைவாக விற்கப்பட்டது.

    ராயபுரம்:

    சென்னை, காசிமேடு, நொச்சிக்குப்பம் உள்ளிட்ட மீன் மார்க்கெட்டுகளில் கடந்த சில நாட்களாக மீன் விற்பனை மிகவும் குறைந்து வருகிறது. எண்ணூர் பகுதியில் கடலில் எண்ணை கழிவு கலந்ததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    இதற்கு முன்பு ஒருமுறை கடலில் கச்சா எண்ணெய் கலந்த போதும் விற்பனை குறைந்து காணப்பட்டது. அப்போது மீன் உண்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன் பிறகு விற்பனை அதிகரித்தது. ஆனால் தற்போது அது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்படாததால் பொதுமக்கள் பலர் மீன் வாங்க தயங்குகிறார்கள் என்று மீன் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    மேலும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருவதாலும் மீன்வரத்து மற்றும் விற்பனை குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் மீன் விலையும் கடந்த சில நாட்களாக கடுமையாக குறைந்து வருகிறது.

    இந்நிலையில் காசிமேடு மீன் பிடி துறைமுகத்துக்கு 200 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து இன்று அதிகாலையில் கரைக்கு திரும்பினர். ஞாயிற்றுக்கிழமையான இன்று கிருத்திகை மற்றும் பிரதோஷம் என்பதால் மீன் வரத்து குறைவாகவே இருந்தது. மேலும் மீன்கள் விலையும் மிக குறைவாக காணப்பட்டது. அதே நேரத்தில் இன்று மீன் வாங்க அதிக கூட்டம் காணப்பட்டது. வஞ்சிரம், வவ்வால், சங்கரா, சீலா, இறால், நண்டு போன்றவை கடந்த வாரத்தை விட இன்று விலை மிக குறைவாக விற்கப்பட்டது.

    கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.1,200-க்கு விற்ற வஞ்சிரம் மீன் இன்று ரூ.350 முதல் ரூ.450 வரை விற்கப்பட்டது. கடந்த வாரம் ரூ.1,000-க்கு விற்கப்பட்ட வவ்வால் இன்று ரூ.200-க்கு விற்பனையானது. ரூ.500-க்கு விற்கப்பட்ட சங்கரா ரூ.100-க்கும், ரூ.450-க்கு விற்கப்பட்ட இறால் ரூ.200-க்கும், ரூ.600-க்கு விற்கப்பட்ட சீலா ரூ.300-க்கும், ரூ.300-க்கு விற்கப்பட்ட நண்டு ரூ.80 முதல் 90-க்கும் விற்கப் பட்டன. இந்த நிலையில் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் நாளை மீன்வரத்தும் அதிகமாக இருக்கும், மேலும் மீன் விலையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    • தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் வரும் நிலையில் நேற்று 20 லாரிகளே வந்துள்ளன.
    • வரத்து குறைவு மற்றும் திருமண சீசன் காலம் ஆகியவற்றால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    திருவனந்தபுரம்:

    தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த பாதிப்பு அண்டை மாநிலமான கேரளாவிலும் எதிரொலித்துள்ளது. அங்கு அத்தியாவசிய தேவை பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதில் குறிப்பாக காய்கறிகள் கடும் ஏற்றத்தை சந்தித்துள்ளது. தமிழகத்தில் இருந்து காய்கறிகள் கேரளாவுக்கு செல்வது குறைந்துள்ளதால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    தமிழகத்தில் இருந்து செல்லும் முருங்கைக்காய் வரத்து குறைவு காரணமாக கேரளாவில் ஒரு கிலோ ரூ.170-க்கு விற்கப்படுகிறது. கடந்த வாரம் இதன் விலை ரூ.90 ஆக இருந்தது.

    பச்சை மிளகாய் விலையும் உயர்வை சந்தித்துள்ளது. கடந்த வாரம் ரூ.40-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.80 ஆக உயர்ந்து உள்ளது. அதே நேரம் இஞ்சியின் விலை ரூ.240-ல் இருந்து கிலோ ரூ.140 ஆக குறைந்துள்ளது. வயநாட்டில் இருந்து இஞ்சியின் வரத்து அதிகமாக உள்ளதே இந்த விலை வீழ்ச்சிக்கு காரணமாக உள்ளது.

    ஆலப்புழா மார்க்கெட்டுகளுக்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் வரும் நிலையில் நேற்று 20 லாரிகளே வந்துள்ளன. வரத்து குறைவு மற்றும் திருமண சீசன் காலம் ஆகியவற்றால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • மஹிந்திரா நிறுவன கார் மாடல்கள் விலை மாற்றம்.
    • மஹிந்திரா கார்களின் விலை மாற்றம் அடுத்த ஆண்டு அமலுக்கு வருகிறது.

    மஹிந்திரா நிறுவனம் தனது கார் மாடல்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. அதன்படி மஹிந்திரா எஸ்.யு.வி. மாடல்கள் விலை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படுகிறது. எந்தெந்த மாடல்களுக்கு எவ்வளவு விலை உயர்த்தப்படும் என்ற தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

    பணவீக்கம் காரணமாக உதிரி பாகங்கள் விலை உயர்ந்துள்ளதே விலை உயர்வுக்கு காரணம் என்று தெரிகிறது. பணவீக்க சூழலிலும் முடிந்தவரை விலையை கட்டுப்படுத்த முயற்சித்ததாகவும், வேறு வழியின்றிதான் கார்களின் விலையை உயர்த்தும் முடிவை எடுத்ததாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

     


    இந்த அறிவிப்பு மூலம் இந்தியாவில் தனது வாகனங்கள் விலையை உயர்த்தும் புதிய நிறுவனமாக மஹிந்திரா இணைந்துள்ளது. முன்னதாக மாருதி சுசுகி, ஹூண்டாய், எம்.ஜி. மோட்டார்ஸ், ஆடி மற்றும் டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்களது வாகனங்கள் விலை அடுத்த மாதத்தில் இருந்து உயர்த்தப்படும் என அறிவித்தன.

    • கார்த்திகை தீப திருநாளையொட்டி பூக்கள் விலை கடுமையாக உயர்ந்தது.
    • மல்லிகை ரூ.2,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    மதுரை

    மதுரை என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக மல்லிகைப்பூ தான். நகரின் எந்த பகுதியில் வாங்கினாலும் கட்டிய மல்லிகைப் பூவுக்கு தனி மவுசு உண்டு. இடைவெளியின்றி கலர் பூ சேர்த்து விற்கப்படும் மல்லி கைப்பூ உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில் இருந்து வருப வர்களையும் விநாடியில் ஈர்த்துவிடும் தன்மை வாய்ந் தது.

    அந்த வகையில் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் அனைத்து வித மான பூக்களும் மதுைரை, விருதுநகர், தேனி, திண்டுக் கல் உள்ளிட்ட மாவட்டங்க ளில் இருந்து கொண்டு வரப்பட்டு சந்தைப்படுத்தப் படுகிறது. திருவிழாக்கள், சுபமுகூர்த்த தினங்கள், பண்டிகைகள் உள்ளிட்ட நாட்களில் மல்லிகைப்பூவின் விலை புதிய உச்சம் தொடு வது வழக்கம்.

    இந்த நிலையில் திருக் கார்த்திகை தீபத்திருநாளான இன்று பூக்கள் விலை கடு மையாக உயர்ந்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் நேற்று ரூ.1,800-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ மல்லிகைப்பூ இன்று ரூ.400 உயர்ந்து ரூ.2,200-க்கு விற்பனையானது.

    அதேபோல் முல்லைப்பூ நேற்று ரூ.800-க்கு விற்கப் பட்ட நிலையில் இன்று 1000 ரூபாய்க்கு விற்பனையாகி றது. கனகாம்பரம் பூ நேற்று ரூ.800-க்கு விற்பனை செய் யப்பட்ட நிலையில் இன்று ரூ.1200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பிச்சிப்பூ ரூ.900 என்ற நேற்றைய விலையில் இருந்து மாறி இன்று ரூ.ஆயிரத்திற்கும், சம்மங்கிப்பூ ரூ.150-க்கும், மெட்ராஸ் மல்லி ரூ.800-க்கும், அரளிப் பூ ரூ.400-க்கும், பட்டன் ரோஸ் 200 ரூபாய்க்கும், செண்டுமல்லி 200 ரூபாய்க் கும் விற்பனை செய்யப்பட் டது.

    • கோவை மாவட்டத்தில் கார்த்திகை திருவிழாவை கொண்டாடும் பணிகள், அங்கு உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பாக நடந்து வருகின்றன.
    • கோவை பூ மார்க்கெட்டுகளில் பூக்க ளின் விலை தற்போது அதிகரித்து உள்ளது.

    கோவை,

    உலகம் முழுவதும் கார்த்திகை தீபத்திருவிழா நாளை (26-ந்தேதி) கொண்டாடப்பட உள்ளது. இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் கார்த்திகை திருவிழாவை கொண்டாடும் பணிகள், அங்கு உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பாக நடந்து வருகின்றன.

    மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அங்குள்ள கோவில்களுக்கு சென்று வழிபடுவதற்கா கவும், வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்வதற்காகவும் பல்வேறு வகையான பூக்கள் மற்றும் பொரி-கடலை ஆகியவற்றை வாங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளையும் பூக்கள் விற்பனை க்காக கொண்டு வரப்படுகி ன்றன. மேலும் வெளி மாவட்டம் -மாநிலங்களில் இருந்து பல்வேறு வகையான பூக்கள் சரக்கு லாரிகளில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படு கிறது.

    கோவை மாவட்டத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் ஒட்டுமொத்த மாக சுமார் 5 டன் பூக்கள் விற்ப னைக்காக கொண்டு வரப்படுகி ன்றன. அங்கு அவை உள்ளூர் வியாபா ரிகளுக்கு ஏலமுறையில் விற்கப்ப்ப ட்டு வருகின்றன. மேலும் பொதுமக்களும் குடும்பத்து டன் வந்திருந்து கிலோக்க ணக்கில் பூக்களை கொள்மு தல் செய்து வருகின்றனர்.

    கோவை மாவட்டத்தில் கார்த்திகை தீபத்திரு விழாவை முன்னிட்டு பூ மார்க்கெட்டில் வாடிக்கை யாளர்களின் கூட்டம் அலைமோதியது. அதேநே ரத்தில் வெளியூர்-வெளி மாவட்டங்களில் இருந்து பூக்களின் வரத்து வெகுவாக குறைந்து இருந்தது.

    எனவே கோவை பூ மார்க்கெட்டுகளில் பூக்க ளின் விலை தற்போது அதிகரித்து உள்ளது.

    மேலும் பொரி மற்றும் கடலை வகைகளின் விலை களும் சற்று அதிகரித்து உள்ளன. கோவை பூ மார்க்கெட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ மல்லிகை ரூ.1200-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவற்றின் விலை ரூ.400 அதிகரித்து இன்று ஒரு கிலோ மல்லி ரூ.1600-க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேபோல முல்லைப்பூவின் விலை தற்போது ரூ.800-க்கு விற்பனை செய்யப்ப டுகிறது. அரளிப்பூவின் விலை மட்டும் ரூ.40 குறைந்து தற்போது ரூ.160-க்கு விற்கப்பட்டு வருகிறது.

    கோவை ஆர்.எஸ்.புரம் பூ மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் ஒரு கிலோ பூக்களின் விலைவிவரம் (அடைப்புக்குறிக்குள் பழைய விலை):

    ெசவ்வந்தி-120, அரளி-160 (200), சம்பங்கி-80, தாமரை ஒரு பூ-20, ஜாதிமல்லி-800 (600), கோழிக்கொண்டை-50, துளசி-30, மரிக்கொழுந்து ஒரு கட்டு-50, ரோஜா-120, வெள்ளை செவ்வந்தி-280, கலர் செவ்வந்தி-200 (160).

    கோவை பலசரக்கு மட்டும் ஒட்டுமொத்த கடைகளில் தற்போது பொரிகடலை மற்றும் அவல்பொரியின் விலை சற்று அதிகரித்து உள்ளது. நாளை திருக்கார்த்திகை என்பதால் பொதுமக்கள் விலைஉயர்வு பற்றி கவலைப்படாமல் பூக்கள் மற்றும் பலசரக்கு பொரு ட்களை வாங்கி செல்கின்ற னர்.

    • வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்து உள்ளது.

    போரூர்:

    சின்னவெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.120 வரை விற்கப்பட்டது. பின்னர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து அதன் விலை ரூ.100-க்கு கீழ் குறைந்தது. கிலோ ரூ.80 வரை விற்பனை ஆனது.

    இந்த நிலையில் கோயம்பேடு காய்கறி மார்கெட்டிற்கு சின்ன வெங்காயம் வரத்து மீண்டும் குறைந்து உள்ளது. இதனால் அதன் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. மொத்த விற்பனை கடைகளில் இன்று ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.90-க்கு விற்கப்படுகிறது.வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சின்னவெங்காயத்தின் விலை மீண்டும் கிலோ ரூ.100-யை கடந்து உள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதனால் சமையலில் சின்ன வெங்காயத்தின் பயன்பாட்டை குறைத்து உள்ளனர். பெரிய வெங்காயத்திற்கு மாறி உள்ளனர்.

    எனினும் பெரிய வெங்காயத்தின் விலையும் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இன்று மொத்த விற்பனை கடைகளில் முதல் ரக பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ. 50 ஆக உள்ளது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.60-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் தக்காளி உற்பத்தி நடந்து வரும் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்து உள்ளது. தினசரி 55 லாரிகள் வரை விற்பனைக்கு குவிந்து வந்த தக்காளி இன்று 40 லாரிகளாக குறைந்தது. இதனால் தக்காளி விலையும் அதிகரித்து உள்ளது.

    மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.36-க்கும் வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.50 வரையிலும் விற்பனை ஆனது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.80-க்கு விற்கப்பட்ட பீன்ஸ் விலை குறைந்து ரூ.50-க்கு விற்கப்படுகிறது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை (கிலோவில்) வருமாறு:-

    ஊட்டி கேரட்-ரூ.40, முள்ளங்கி-ரூ.30, பீட்ரூட்-ரூ.25, அவரைக்காய் ரூ.65, ஊட்டி சவ்சவ்-ரூ.20, முருங்கைக்காய்- ரூ.90, முட்டை கோஸ்-ரூ.8, உஜாலா கத்தரிக்காய்- ரூ.30, குடை மிளகாய் ரூ.20, வெண்டைக்காய்-ரூ.30, கோவக்காய்-ரூ.35, பன்னீர் பாகற்காய்-ரூ.45, பீர்க்கங்காய்-ரூ.30.

    ×